15470 அவள் வீடு.

சித்ரா பிரசன்னா. யாழ்ப்பாணம்: இளங்கீரன், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ஸ்ரீமாருதி பிரின்டர்ஸ், 55, நாவலர் வீதி).

v, 60 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-43582-0-1.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான திருமதி சித்ரா பிரசன்னா யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியராவார். ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறிய கவிதைகளைக் கொண்டதாக இத்தொகுதி அமைகின்றது. ‘வாசலில் நின்று வரவேற்க முடியாதவளாய், மலர் சூடி மாங்கல்யம் அணிய முடியாதவளாய், அலங்காரங்கள் அத்தனையும் மறுக்கப்பட்டவளாய், சுப நிகழ்வுகளில் சுபம் வரை காத்திருப்பவளாய், சுமைகளுக்குள் வலிந்து சுமத்தப்பட்டவளாய், துரத்தித் துரத்தி வதைக்கப்பட்ட ஒருத்தியின் நினைவுகளின் சின்னச் சின்னச் சிதைவுகள் உள்ளே சிதறிக் கிடக்கின்றன. புன்னகை மறக்காமல், கண்ணீரை மறைக்காமல், தன்னாலும் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையில் மீண்டும் வாசலுக்கு வந்திருக்கின்றாள்-ஏனெனில் இது அவள் வீடு.’  

ஏனைய பதிவுகள்