15472 அவன் பையில் ஒழுகும் நதி.

ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). மருதமுனை: புதுப்புனைவு பதிப்பகம், 124 A, ஸ்டார் வீதி, பெரியநீலாவணை-1, 1வது பதிப்பு, ஜீலை 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

(10), 11-88 பக்கம், விலை: ரூபா 299., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7733-03-6.

ஈழத்துத் தமிழ்க் கவிதை வெளியில் ஒரு பின்-நவீனக் குரல் ஜமீலினுடையது. சமூகத் தளத்தில் விளிம்புநிலைச் சிறுவர்களின் வெளியை அதன் சகல பரிமாணங்களோடும் தொடர்ந்து பதிவு செய்து வருபவர் அவர். பெரியவர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களின் அகவுலகம் பற்றிய ஜமீலின் கவிதைகள் ‘சிறுவர் வெளி’ பற்றி நாம் கண்டுகொள்ளத் தவறிய பக்கங்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது. கவிதைகளின் பிரதான மையம் சிறுவர் வெளியாக இருப்பினும் அதையும் தாண்டி விளிம்புநிலைப் பெண்கள், சாதாரண மக்களின் வாழ்வில் கவனிக்கப்படாத பக்கங்கள் என இவை விரிவடைந்துள்ளன. ஜமீல் அம்பாரை மாவட்டத்தில் மருதமுனைக் கிராமத்தில் பிறந்தவர். 1993இல் சிறுவர் இலக்கியத்துக்கான தேசிய விருதினைப் பெற்றவர். இவரது முதல் கவிதைப் பிரதியான ‘தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்’; 2007 யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும், தடாகம் இலக்கிய வட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றது.

ஏனைய பதிவுகள்

Livre Des Prime Sans nul Annales

Aisé 50 tours gratuits sans dépôt Thunderstruck – Les Espaces Non payants Sauf que Free Spins À l’exclusion de Classe Obligé La sécurité , !