15473 ஆகவே என்னை நீங்கள் கொலை செய்யலாம்.

பெரிய ஐங்கரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

xii, 80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-54018-3-8.

கவிஞர் பெரிய ஐங்கரனின் 42 கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஆகவே என்னை நீங்கள் கொலை செய்யலாம், இருண்மை, தூசு தட்டுதல், சிதறும் தத்துவங்கள், கருப்பை பிடுங்குதல், சிரிப்புச் சாம்பல், இரத்தக் கதை, இன்று நீ எதிலும் முழுமையாய் இல்லை, எழுதாத காவியம், வனவாச யுகம், எங்கோ போகும் விமானம், என் கதை, புத்தர், ஏமாற்று, வெட்டிக்குள முகாம், சிலையாதல், ஒடுங்குதல், 21ஆம் நூற்றாண்டு, பாம்புகளின் உலகம்-5, சந்திரன் தொலைதல் பற்றி, மேலும் சில உலகங்கள், கிளைப் பனை, தற்காலிக விடிவெள்ளிகள், கடுகதி ஆலை, கடலாசை, அந்தி, பூமியின் சிறகுகள், அறுத்தல் அல்லது அழித்தல், ஒரு வரி, கறுப்பு மழை, மரணம் மலிந்த பூமி, தூக்குமேடைக் குறிப்புகள், முள்ளிவாய்க்கால் கீதை, திருப்பள்ளியெழுச்சி என இன்னோரன்ன தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. ஜீவநதியின் 21ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12836 – தமிழ்க் கலைக் கோவை.

கலைவாணி பதிப்பகம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பகம், பெப்ரவரி 1962. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). 176 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 x 12 சமீ. கலைவாணி புத்தக

12482 – தமிழருவி: தமிழ்விழா சிறப்பிதழ்: 1990:

தமிழ் மகா வித்தியாலயம ;, பண்டாரவளை. மலர்க் குழு. பண்டாரவளை: தமிழ் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1990. (அச்சக விபரம் தரப்படவில்லை). 160 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.