15474 ஆண்கோணி.

த.உருத்திரா (இயற்பெயர்: த.உருத்திரகுமாரி). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி). 

(10), 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-4628-05-2.

உருத்திரா எழுதிய ‘ஆண்கோணி’ கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய தமிழியல் விருதுகள் 2014இல் கிடைத்துள்ளது. கவிதைக்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டு நூல்களில் ’ஆண்கோணி’ யும் ஒன்று. ஏற்கெனவே சிறந்த கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருதினையும் ஆண்கோணி பெற்றுக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மண்டூரை பிறப்பிடமாக கொண்ட கவிஞர் உருத்திரா  இத்தொகுப்பில் தான் எழுதிய வெறுங்கனவு, வகுப்பறை, குருட்டு வெளவால், வாழ்க்கை, இரவில் மரிப்பவள், லண்டன், வேட்கையின் பகை, பொழுதொன்றுக்காய், கடற்கரைக்குப் போன தனிமை, காதலின் பரப்பளவு, கதவுகளின் கதைகள், தாயகம் என்பது, கல்யாண வைரவன், அஞ்சலிக் குறிப்புகள், இனந்தெரியாதவன், வீழ்ந்து கிடக்கின்ற நதி, அம்மம்மாவின் பாடல், துறவறம், தாய்களின் இரங்கற்பா, கூறு பிரித்தல், ஆண்கோணி, நிலமற்றவன், சந்திப்பு, பண்பாடு, தலைப்பிட முடியாத கவிதை, தரையோட வாழ்தல், தலையெடுத்தல் ஆகிய கவிதைகளைத் தேர்ந்து வழங்கியுள்ளார். ஈழத்து இலக்கிய உலகில் கால்பதித்து 24 வருடங்களில் வெளிவரும் அவரது முதலாவது கவிதைத் தொகுப்பு இது. இலங்கை வானொலியின் கவிதைக் கலசத்தில் இவரது கவிதைகள் ஆரம்பத்தில் 1990களில் இடம்பெற்றன. தொடர்ந்து மறுகா, பெண், தேனகம், மூன்றாவது மனிதன் ஆகிய சிறுசஞ்சிகைகளில் இவரது கவிதைகள் இடம்பெற்றிருந்தன.

ஏனைய பதிவுகள்

Online Ports

Content Splash Intogold Seafood Ports! What are the Finest Free online Slots? Are there 100 percent free Ports Game To have Android os Devices? Remember,