15477 ஆறுமுக நாவலர் கவித் திரட்டு.

ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

vi, 38 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-9233-97-8.

ஆறுமுக நாவலர் அவர்கள் இயற்றிய தனிப் பாக்களைக் கொக்குவில் வாசரும், கொழும்பு மீனாம்பாள் அச்சியந்திரசாலை அதிபருமாயிருந்த திரு. சி.செல்லையாபிள்ளை அவர்கள் தொகுத்து, 1914ஆம் ஆண்டு அச்சிட்டு ஒரு சிறு நூலாக வெளிப்படுத்தினார். அந்நூல் இப்போது கிடைத்தல் அரிது. பின்னாளில் 1972இல் இது இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது. அந்நூலின் கண்ணுள்ள பாக்களோடு புதிதாகக் கிடைத்த ஒரு பாவையும் சேர்த்து ‘ஆறுமுகநாவலர் கவித்திரட்டு” என்னும் பெயரோடு மீள்பதிப்பாக இந்நூல் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. உரைநடையை நவீனத்துவ மாற்றங்களுடன் பயன்படுத்திய நாவலர், செய்யுள் நடையைத் தமது காலத்து மரபுச் செய்யுட் பாணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கையாண்டுள்ளார். கடவுள் மீதும் கோவில்கள் மீதும் பாடப்பட்ட செய்யுட்கள், கீர்த்தனைகள் இராகத்தோடு பாடக்கூடியனவாக விளங்குகின்றன. பெரிதும் மானிடரைப் பாடாத நாவலர், தமது குருவாகிய சரவணமுத்துப் புலவர் மற்றும் தமது மாணாக்கர் வி.சுப்பிரமணியபிள்ளை ஆகியோர் மீது மட்டும் சரம கவிதைகள் பாடியுள்ளார்.

ஆறுமுக நாவலர் கவித் திரட்டு.

கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). சுன்னாகம்;: கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசண்முகநாத அச்சகம்).

(2), 18 பக்கம், விலை: சதம் 50, அளவு: 17.5×12 சமீ.

ஆறுமுக நாவலர் பிறந்த நூற்றைம்பதாம்ஆண்டு நினைவு மலராக இச்சிறுநூல் வெளியிடப்பட்டுள்ளது. மலாய் நாட்டு இளைப்பாறிய உத்தியோகத்தர் கொல்லன்கலட்டி உயர்திரு ந.பொ.செ.இலங்கைநாயகம் அவர்கள் விரும்பியவாறு சுன்னாகம் கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்களால் இந்நூல் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கொழும்பு மீனாம்பாள் அச்சியந்திரசாலை அதிபரான கொக்குவில் சி.செல்லையாபிள்ளை அவர்கள் தொகுத்து 1914இல் அச்சிட்டுவெளியிட்டிருந்த ஆறுமுகநாவலர் கவித்திரட்டுடன் பின்னாளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பாவையும் சேர்த்து இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Mybet Spielsaal

Content Echtes Geld Craps – Das Datenschutz in neuesten europäischen Standards Bonusbedingungen Untergeordnet betriebsintern sei beiden Bereichen separate Wachsamkeit zuteil. Bekanntermaßen hierbei sehen einander die