15478 இதயத்தின் ஓசைகள்.

ஸக்கியா ஸித்தீக் பரீத். கொழும்பு 10: முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம், ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

58 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-98766-2-5.

 ‘விடியலின் விழுதுகள்’ என்ற சிறுகதைத்தொகுதியையும், ‘முதிசம்’ என்ற பொன்மொழித் தொகுப்பு நூலையும் வழங்கிய பெண் படைப்பாளியான ஸக்கியா ஸித்தீக் பரீத் எழுதியுள்ள 42 கவிதைகளின் தொகுப்பு இது. சிறுவர்க்கான கவிதைகளாகவும், இளைஞர்களுக்கான கவிதைகளாகவும் இவை அமைந்துள்ளன. இத்தொகுதியில் சமாதானம், தாயின் பெருமை, ஒற்றுமை, அறிவுரைகள், உழைப்பின் மகிமை, போர் போன்றவை பாடுபொருட்களாக அமைந்துள்ளன. புனிதனாக மாறிய நீர், அருளுடனே வாழ்ந்திடுவீர், எங்கள் நபி மீது ஸலவாத்துச் சொல்வோம், றமழானே வாராய், சாய்ந்தாடு மகளே ஷவ்வால் பிறையே, ஒரு மையித்தின் குரல் போன்ற ஆன்மீகக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65839).

ஏனைய பதிவுகள்

Регистрация в Pinco casino: Праздник вдобавок Верификация на Должностном Сайте Пинко игорный дом

Content Рабочее гелиостат Пинко игорный дом: функции вдобавок внутренние резервы платформы Бонусные промокоды А как Ввалиться во Личный Агрокабинет Пинко Игорный дом Email рекомендуется Pinco