15480 இரவின் எதிரிப் பூக்கள்.

வட அல்வை இராஜகிருபன். (இயற்பெயர்: தங்கவடிவேல் கிருபாகரன்), சி.ரஜேந்தனா (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xii, 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-5249-63-8.

அமரர் தங்கவடிவேல் கிருபாகரன் வடமராட்சி, அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 2002இல் விஞ்ஞானமானிப் பட்டதாரியான இவர் திருக்கோணமலையில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். 2020இல் சுகவீனம் காரணமாக மறைந்த இவரது கவிதைகளைத் தொகுத்து அவரது மறைவின் 31ஆம் நாள் கிரியைகளின் போது நூலுருவில் அவரது நினைவாக 166ஆவது ஜீவநதி வெளியீடாக வெளியிட்டுள்ளனர். தனது அனுபவங்களை தான் கண்ட சமூக முரண்பாடுகளை, அவலங்களை, போலியான மானுடர்களின் பொய்மை முகங்களை, இன்றும் மறையாதிருக்கும் யுத்தத்தின் சாட்சிகளை, காதலை, கனவுகளை, ஏக்கங்களை தனது கவிதைகளில் எளிமையாகவும் வலிமையாகவும் இராஜகிருபன் சொல்லியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

13373 சிறுவர் துஷ்பிரயோகம்.

ஆ.பேரின்பநாதன். யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). xxxii, 212 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

12887 உமா கரம்(புற்றுநோய் தவிர்ப்போம் என்ற நூலின் மீள்பிரசுரம்).

சி.உமாகரன். நயினாதீவு: சிவசம்பு உமாகரன் குடும்பத்தினர், திருவாலவாய், 3ஆம் வட்டாரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). (6), 128 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: