நவாலியூர்க் கவிராயர் (இயற்பெயர்: த.பரமலிங்கம்). யாழ்ப்பாணம்: கிருபா லேணர்ஸ், 226, கஸ்தூரியார் வீதி, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி).
x, 92 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-96679-0-7.
மண்வாசனை, யதார்த்தம் என்பன ஈழத்துப் படைப்புகளில் வற்புறுத்தப்பட்ட காலகட்டத்தில் தனது எழுத்தாளுமையை வாசகரோடு பகிரத் தொடங்கியவர் நவாலியூர் த. பரமலிங்கம். இவரது இலக்கியப் பிரவேசம் கவிதையோடு ஆரம்பித்தது. பின்னர் நாவல், சிறுகதை, கட்டுரை எனப் பல கூறுகளில் பாய்ச்சல் செய்தவர். நவாலியூர்க் கவிராயர், பூமணி மைந்தன், பட்டனைந்து, மூலபாரதி, தேவி பரமலிங்கம் என்னும் பெயர்களிலும் இவர் எழுதிவந்திருக்கிறார். பாடமுடியாதவர்களின் குரலாக பாடுகின்றேன் என்கிறார் ‘உலகக் கவிஞர் கதே’. பிறருடைய வலியைத் தன்னுடைய வலியாக உணருதலையே ஒத்திசைவு என்போம். இங்கே பிறர் வலியும் தன் வலியும் ஒன்றேயான அனுபவக் கலப்பு இவரது கவிதைகளின் வல்லமையாக ஒலிக்கின்றன. ‘குறுக்கீடுகள்’ என்ற கவிதை தொடங்கி ‘பசுமை படரட்டும்’ என்ற கவிதை ஈறாக 52 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.