15490 ஈழத்து இரட்டையர்கள்: இரட்டைமணிமாலை.

ஈழத்துப் பூராடனார் (தொகுப்பாசிரியர்), செ.இதயசோதி பென்சமீன் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான வீதி, தோற்றாத்தீவு-2, 1வது பதிப்பு, 1984. (களுவாஞ்சிக்குடி: செ.இதயசோதி பெஞ்சமின், மனோகரா அச்சகம், தோற்றாத்தீவு).

(10), 30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ.

இந்நூல் ஒரு வரலாற்றுப் பிரபந்த இலக்கியமாகும். செட்டிபாளையத்தில் ஏடறியாப் புலவர்களான கணபதிப்பிள்ளைப் புலவர், சின்னவப் புலவர் ஆகிய இருவர், வாய் மொழிச் செய்யுள்களை யாத்துவந்துள்ளனர். அவை பின்னர் சிறு நூல்களாக வெளிவந்திருந்தன. ஈழத்துப் பூராடனாரின் இத் தொகுப்பில், கணபதிப்பிள்ளைப் புலவரும் வரகவி க.உ.சின்னவப் புலவரும் இணைந்து எழுதிய சிறைச்சாலையின் சிறப்பு, தன் கணவனை விட்டு வேறொருவருடன் சென்ற பெண் நிலை, கணவனைப் பேணாப் பெண், முன்னைநாட் பேரூந்துப் பயணம், இற்றைநாட் பேரூந்துப் பயணம், காலத்தின் கோலக் கும்மி, ஆசாடபூதிச் சாமியின் வாரிசு, நாகரிக நரியார், சீர்கெட்ட தூர்த்தை, அரசாங்க ஊழியத் தவலம் ஆகிய 10 செய்யுள்களுடன், கணபதிப்பிள்ளைப் புலவர் தனித்தெழுதிய கதிர்காமத்தம்மானை, கதிர்காமச் சதகம், மாணிக்க கங்கைக் காவியம், கையறுநிலை நினைவுமலர், கண்ணகை அம்மன் கல்வெட்டு, பெருவெள்ளத்தின் ஒப்பாரி ஆகிய செய்யுள்களும், சின்னவப் புலவர் இயற்றிய திரு ஈ.ஆர்.தம்பிமுத்து அவர்கள், சங்கமக் கண்டிப்பிள்ளையார் பதிகம், கோராவெளியம்மன் காவியம், மழைபெய்ய வேண்டிக் கந்தசுவாமி பேரிற் பாடிய காவடிப் பாட்டு, இலங்கை படும் துயரம், வேளாண்மைச் செய்கை பற்றிய பாக்கள் என இன்னோரன்ன பாடல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11473). 

ஏனைய பதிவுகள்

Tragamonedas de WMS

Content ¿Zeus Rush Fever tiene acciones extras? ¿Â qué es lo primero? resultan los símbolos de bonus? Géneros sobre tragamonedas populares Criterios de software remuneración