15503 என் நகல் நீ.

யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xiv, 62 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: (ஐந்து நூல்கள் கொண்ட தொகுதி) ரூபா 750., அளவு: 10×18.5 சமீ., ISBN: 978-955-4096-14-1.

நிலத்தின் நினைவுகளை ஏக்கங்களாகச் சுமந்து புகலிடத்தில் (லண்டனில்)வாழும் ஒரு இளம் கவிஞனின் எண்ணங்கள் வண்ணங்களாக வடிவம்பெற்றுள்ளன. கையடக்கமான சிறிய காதல் கவிதை நூல். மூன்று அல்லது நான்கு வரிகளுக்குள் தன் செய்தியை சுவையாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும், காதல்ரசம் கமழ வடித்துள்ளார். உதாரணத்துக்காக இரண்ட கவிதைகள்: உன் புன்னகையின் விலை உனக்குத் தெரியாமல் இருப்பதால் தான்/ இன்னும் எனக்கு/ இலவசமாய்க் கிடைத்துக்கொண்டிருக்கிறது, எழத் தைரியமுண்டு/ மனம்தான் இல்லை/ நான்விழுந்து கிடப்பது/உன் கன்னக் குழியில். ஐந்து நூல்களை ஒரே தொகுதியில் வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

10780 செம்மொழி மீளாய்வு.

கதிர்.சரவணபவன். வவுனியா: தோணிக்கல் நாகபூஷணி அம்மன் தேவஸ்தான ஆலய பரிபாலன சபையினர், 1வது பதிப்பு, 2012. (வவுனியா: பொய்கை கணனிப் பதிப்பகம், பேருந்து நிலைய மேல்மாடி). 152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

13176 சிவதத்துவ மலர்: கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் (கோவில்குளம் சிவன் கோவில்) திருக்குடமுழுக்கு விழா சிறப்பு மலர், 1996.

கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). வவுனியா: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில், கோவில்குளம், 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195, புளுமெண்டால் வீதி). (6), 7-215 பக்கம், புகைப்படங்கள்,