15504 என் நதியில் உன் பரிசல் (புதுக்கவிதை).

யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

x, 93 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், தகடுகள், விலை: (ஐந்து நூல்கள் கொண்ட தொகுதி) ரூபா 750., அளவு: 10×18.5 சமீ., ISBN: 978-955-4096-15-8.

நிலத்தின் நினைவுகளை ஏக்கங்களாகச் சுமந்து புகலிடத்தில் (லண்டனில்)வாழும் ஒரு இளம் கவிஞனின் எண்ணங்கள் வண்ணங்களாக வடிவம் பெற்றுள்ளன. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையொத்த இக் கவிதைகளில் சொற்சிறப்பும் ஓசை நயமும் உயிரோட்டமும் உள்ளன. ஐந்து நூல்களை ஒரே தொகுதியில் வெளியிட்டுள்ளார். எழுத்துக்களோடு நின்றுவிடாமல் நடிகனாகவும், பாடலாசிரியராகவும், வானொலி தொகுப்பாளராகவும், வலம்வரும் யாழ் அகத்தியன், தாயக பூமியில் சோதனைகளைத் தாங்கி புலம்பெயர் மண்ணில் தனக்கென பாதைகளை அமைத்து பயணித்து வருகிறார்.

ஏனைய பதிவுகள்

11936 பத்மநாதம்: அமரர் T.P.பத்மநாதன் அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

மலர்க்குழு. தெல்லிப்பழை: மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (தாய்ச் சங்கம்), இணைவெளியீடு, தெல்லிப்பழை: மகாஜனக் கல்லூரி கல்வி அபிவிருத்தி நிதியம் (விளையாட்டு நிதி), முன்னாள் உதைபந்தாட்ட வீரர்கள், 1வது பதிப்பு, மார்ச் 2016.