15505 என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி.

ஜே.பிரோஸ்கான் (இயற்பெயர்: ஜமால்தீன் பிரோஸ்கான்). கிண்ணியா-3: பேனா பதிப்பக வெளியீடு, 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

(6), 7-68 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 16×22 சமீ., ISBN: 978-955-0932-17-7.

கிழக்கிலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரில் 1984இல் பிறந்தவர் ஜே.பிரோஸ்கான். கிண்ணியா பேனா இலக்கியப் பேரவையின் பணிப்பாளர். இது இவரது எட்டாவது நூலாகும். பிரோஸ்கானின் கவிதைகள் தனித்துவமான அடையாளங்களைக் கொண்டவை. அவை நிலையின்மை, பதற்றம், கொந்தளிப்பான மனநிலை, கோபம் எனப் பரவிப் பாய்கின்றன. போர்ச்சூழல் தணியாத இலங்கையில் ஒலிக்கும் இக்கவிதைகளுக்குப் பின்னேயுள்ள உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. இறந்தகால நினைவுகளிலிருந்து எவ்வாறு விலகிச் செல்வது, அதிகாரத்தின் அழுங்குப் பிடியிலிருந்து எப்படித் தப்பிப்பது, நிழலாகத் தொடரும் மரணத்தை எவ்வாறு வித்தைகாட்டி நழுவிச்செல்வது என்ற கேள்விகளுக்கிடையே காதலிக்கக் கற்றுக் கொள்ளவும், அன்பைச் சொல்லவும் பழகுவதெப்படி என்பது பற்றியும் இவரது கவிதைகள் பேசுகின்றன.

ஏனைய பதிவுகள்

Money Master Twist Links

Content Claim So it Private Basic Put Extra Away from 30 100 percent free Spins At the Wonderful Lion Gambling establishment How can i Allege