15510 ஒரு சிறு புள்ளின் இறகு.

மணற்காடர் (இயற்பெயர்: ராஜாஜி ராஜகோபாலன்). திண்டுக்கல்: ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீராம் கொம்பிளெக்ஸ், காந்தி நகர் மெயின் ரோடு, வத்தலகுண்டு, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (சென்னை 116: ஏ.கே.எல். பிரின்டர்ஸ்).

112 பக்கம், விலை: ரூபா 300.00, இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-943467-5-3.

பருத்தித்துறையின் கீழைப் புலோலி கிராமத்தில் பிறந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்து சென்று, அந்நாட்டு சட்டத்துறையில் பணியாற்றி ஒய்வுபெற்று, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கனடாவில் வாழ்ந்துவரும் மணற்காடரின்; கவிதை மலர்கள் இவை. ‘படிம தியானங்கள், உவமை உற்சவங்கள், உருவகச் சிற்பங்கள் என்று அலங்காரங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் போ என்று உதறித் தள்ளி, எனக்கு வாழ்க்கை தெரியும் அதை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன் என்று சொல்கின்றன மணற்காடரின் கவிதைகள். எளிய தமிழில் தோரணைகள் ஏதுமின்றி இயல்பாகக் கைவீசி நடக்கின்றன இவர் கவிதைகள். சுருக்கமாகச் சொல்வதெனில் மணற்காடர் எனும் மூத்த எழுத்தாளரின் இக்கவிதைகள் எந்தவித ஆடம்பரமும் இன்றி எளிமையாகப் பூத்து நுட்பமான கவித்துவ நறுமணத்தைக் காற்றில் விதைக்கும் காட்டுப் பூக்களைப் போல வாசகனை ஆச்சரியப்படுத்துகின்றன’ (முன்னுரையில், இந்திரன்).

ஏனைய பதிவுகள்

Classic Slots

Content The Green Knight casino | Casino Classic: No Deposit Mega Vault Millionaire Bonus! Is Casino Classic Good? Classic Casino Games Golden Nugget Biloxi Hotel