15513 ஒளியின் சரீரம்: சில குறிப்புகள்.

மாரி மகேந்திரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 36 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-54-2.

மாரி மகேந்திரன் மத்திய மலையகத்தில் பொகவந்தலாவ என்ற இடத்தில் பிறந்தவர். கண்டி அசோகா வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். 1996இல் சென்னைக்குச் சென்று திரைப்படத்துறையில் ஒன்பதாண்டுகள் செயற்பட்டவர். ‘நமக்கான சினிமா” என்ற திரைப்படத்துறை சார்ந்த கட்டுரை நூலொன்றை முன்னதாக வெளியிட்டவர். ‘இரும்பு நகரம்’ என்ற இவரது கவிதை நூல் தமிழகத்தில் வெளியானது. இலங்கையில் வெளியாகும் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு ஒளியின் சரீரம். குழந்தையின் பள்ளிக்கூடம், நீள் இருக்கை, நான், ஒரு சந்திப்பு, சுயதுளிகள், கோரிக்கைகளுடன் முடியும் போராட்டங்கள், கண்ணாடி அறைகள், பாவம்-குற்றவுணர்வு-மரணம், 66 புத்தகங்கள், இரட்சிப்பு, மனிதன் ஏங்குகிறான் உண்மைக்காக, எனது கதை, ஒளியின் சரீரம் ஆகிய இன்னோரன்ன தலைப்புகளில் இதிலுள்ள 20 கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Online Slot machines!

Blogs Gamble 5 reel trial slots Better Four-Reel Position Video game Security and safety inside Online slots Reels Ports Earnings and you can Paytable There