15514 ஒற்றைப் பனை.

பாலசுப்பிரமணியம் சிவாந்தினி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 70 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-0958-69-6.

வடமராட்சியின் பொற்பதி குடத்தனையைச் சேர்ந்த சிவாந்தினி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்ஊடகக் கற்கையில் சிறப்புப்பட்டம் பெற்றவர். அன்னையின் பிரிவு, அண்ணனின் பிரிவு என்ற சொந்த அனுபவங்களும், நாட்டின் அசாதாரண சூழலால் யாவர்க்கும் வாய்த்த துயருறும் கணங்களும், நவீன வாழ்க்கையின் இயந்திரத்தனங்களின் அபத்தங்களும், இயற்கை நேசமும், மானுட நேசமும், முதுமையின் பால் கவிந்திருக்கும் ஆழ்ந்த அன்பும், குழந்தைகளின் உலகமும், காதல் நினைவுகளும் என்று பல்வேறு ‘அனுபவ அரியணைகளில்’ இருந்து இவரின் கவிதைகள் ஊற்றெடுத்திருக்கின்றன. ஒற்றைப்பனை என்ற தலைப்புக் கவிதை தனது அண்ணனின் பிரிவைப் பற்றிய தங்கையின் மனப்பதிவாக அமைகின்றது. பனங்கூடலாய் இருந்த வாழ்வு ஒற்றைப்பனையாக்கப்பட்டதான வாழ்க்கையின் குறியீடாகவும் இக்கவிதை தோற்றம் கொள்கின்றது. முற்றத்தில் நின்ற ஐந்து பனைமரங்களும் அண்ணன்களின் குறியீடாய் நிற்க, காணாமல் ஆக்கப்பட்ட இளைய அண்ணாவின் ஒற்றைப் பனைமரம் ஏற்படுத்தும் பிரிவுத்துயர் அப்பனையின் வைரம் போல் மனதிற்குள் இறுகி வளர்கின்றது. இந்நூல் 181ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Online Casino Mit 1 Euro Einzahlung

Content Boaboa Casino Erfahrungen Beste Online Casinos Für 1 Bis 10 Einzahlungen Wo Findet Man Die Besten Online Casinos Mit Einem Startguthaben Von 10 Euro?