ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). மருதமுனை: எதிர் பிரதிகள், 124 A, ஸ்டார் வீதி, பெரியநீலாவணை-1, 1வது பதிப்பு, 2018. (சாய்ந்தமருது: எக்செலென்ட் பிரின்ட்).
(13), 79 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-71810-2-8.
வாசகனை மெல்லிய உணர்வுடன் தன் கவிதைகளுக்குள் அழைத்துச் செல்பவர் கவிஞர் ஜமீல். இவரது கவிதைகள் நுட்பமும் ஆழமும் நம்மை வசியப்படுத்தும் மொழிதலைக் கொண்டுள்ளன. சொற்களின் உண்மையும் இவரது மனவெளிப்பாடும் நமது வரலாற்றின் அனுபவத் தொகுதியாக நம்முன் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஜமீல் வாழ்வனுபவத்தின் மனத் தொகுதியினைச் சொல்வதோடு இயற்கை மீது இவருக்கிருக்கும் காதலையும் அதன் பிரியங்களையும் இங்கே காட்சிப்படுத்துகிறார். அப்துல் றகுமான் அப்துல் ஜமீல் கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் மருதமுனைக் கிராமத்தில் பிறந்தவர். 1993ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருதினைப் பெற்றவர். இவரது முதற் கவிதைப் பிரதி, ‘தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள்’ 2007இல் யாழ். இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும் தடாகம் இலக்கிய வட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றது. ‘உடையக் காத்திருத்தல்’ 2010 கொடகே சாகித்திய விருதின் இறுதிச் சுற்றில் சான்றிதழைப் பெற்றதோடு ‘காற்றை அழைத்துச் சென்றவர்கள்’ 2014ஆம் ஆண்டு கொடகே சாகித்திய விருதின் சான்றிதழையும் அரச சாஹித்திய விருதின் சான்றிதழையும், பேனா கலை இலக்கியப் பேரவையின் விருதினையும் பெற்றுக்கொண்டதோடு ‘தாளில் பறக்கும் தும்பி’ கவிதைப் பிரதி 2015ஆம் ஆண்டு வெளிவந்தது. இது 2016ஆம் ஆண்டுக்கான கவிஞர் வைரமுத்து அறக்கட்டளை விருதையும் பெற்றுக்கொண்டது.