15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

xviii, 116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0958-01-6.

ஜீவநதியின் இருபதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதி. இலக்கண வழுவற்ற ஓசைநயம்மிக்க கவிதைகளைப் புனைவதில் நீலாபாலன் குறிப்பிடத்தக்கவர். காலத்தின் நடப்பியலை இவரது கவிதைகள் சமூக அக்கறையுடன் வெளிப்படுத்துகின்றன. இந்நூலில் இடம்பெறும் அக்கினிப் பாவலன் என்ற முதலாவது கவிதையே இவரது ஒட்டுமொத்த கவித்துவ வலிமையைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்கின்றது. வாழ்க்கைக் கலைக்கு என்னும் கவிதையில் ஆண்-பெண் இணைந்த வாழ்வின் பெருமையை கூறுகின்றார். பருந்துகள் என்ற கவிதையில் சமூகத்தில் வாழும் மனிதர்களின் குணங்களை அழகாய் விபரிக்கின்றார். இத்தகைய கவிச் செழுமைமிக்க அறுபது கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

11653 பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் காதலியாற்றுப்படை.

க.கணபதிப்பிள்ளை. கரவெட்டி: அமரர் திரு.முருகேசு வேலுப்பிள்ளை அவர்களின் நினைவுமலர், பூம்புகார், கரவெட்டி கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 48 பக்கம், புகைப்படம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15

13262 ஸ்தோத்திரக் களஞ்சியம்.

மலர்க் குழு. கொழும்பு: T.S.கணேந்திரன் அவர்களின் நினைவுமலர் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை). 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. T.S.கணேந்திரன் (15.3.1931-18.4.1992) அவர்களின் நினைவுமலராக