15520 கல்லறை சேரும் காற்று.

மா.சிவசோதி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 68 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-05-4

சிவசோதியின் சிறுவயது, இளவயது அனுபவங்களும் போர்க்கால தரிசனங்களும் அனுபவச் செறிவு வாய்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளை பிரசுரிக்க ஏதுவாகின்றன. இழந்த நண்பனுக்கான சமர்ப்பணமாக வெளியாகியுள்ள இந்நூல் ‘மண் மீது நேசம் கொண்டவனே நீ உன் மண்ணோடு தூங்குகிறாய்’ என்ற உறைய வைக்கும் கவிவரிகள் அருமை. புதுக்கவிஞன் ஒருவனுக்கே உரித்தான ஏற்றமும் இறக்கமுமாக இக் கவிதைத் தொகுதியில் ஓர் உயிர்ப்புள்ள கவிஞனாக மா.சிவசோதி என்ற இளைஞனை தரிசிக்க முடிகிறது. வகுப்பறை தொடக்கம் முதிரா நினைவுகள் வரை அனைத்துக் கவிதைகளும் உணர்வு பூர்வமானவை ‘கலைமகள் வாசம் கொள்ளும் கலை பல கற்ற களம் அது’ என்ற வரிகள் வகுப்பறையை கட்டிடமாக பார்க்கும் பலரின் கோணங்;களிலிருந்து வித்தியாசப்படுகிறது. ஜீவநதியின் 95ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுதி.

ஏனைய பதிவுகள்

14252 இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை.

லக்ஷ்மன் ஜயத்திலக்க (ஆணைக்குழுவின் தலைவர்). கொழும்பு 3: இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு, கிராமோதய நிலையம், 152, காலி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1990. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). xviii,

15725 நீறு பூத்த நெருப்பு: சிறுகதைத் தொகுதி.

முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், இலக்கியபவன், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). xii, 13-125 பக்கம்,