15522கலைச் சுவடுகள்.

ஏ.வி.ஆனந்தன். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).

(16), 55 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ.

திருமறைக் கலாமன்றத்தின் மூத்த உறுப்பினரும், சிற்பக் கலை வல்லுநருமான ஏ.வீ.ஆனந்தனின் கலையுள்ளம் காணும் கற்பனைக் கனவுகள் தலை நிமிர்ந்து கானம் பாடுவதை இதிலுள்ள கவிதைகளின் ஊடாக காணமுடிகின்றது. அவரது சிந்தனைகள் இக்கவிதைகளில் சிறகடித்துப் பறக்கின்றன. கவிதை வரிகளுடன் பொருத்தமான அவரது சிற்பங்களின் புகைப்படங்களும் இணைந்து இந்நூலில் எம்மைப் பரவசப்படுத்துகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21736).

ஏனைய பதிவுகள்

11209 கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்) பிரபந்தத் திரட்டு iv நான்காம் பாகம்.

செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: செ.இரத்தினப்பிரகாசம், கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி கோவில் (புதுக்கோவில்) தொண்டர் குழு, 115/4 டபிள்யு ஏ சில்வா மாவத்தை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2001. (நாரஹென்பிட்டியா: ஆர்.எஸ்.ரீ. என்டர்பிரைஸ்).