வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, மார்ச்;, 2021. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xvi, 79 பக்கம், விலை: ரூபா 299., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-97367-0-2.
கவிஞர் ரஜிந்தன் எழுத்தாணி முனையில் பயணப்பட்டிருக்கும் தனது பயணத்தில் மற்றுமொரு கவிதைத் தொகுப்பாக இந்நூலை வெளியிட்டுள்ளார். கடந்தகால அனுபவங்கள், நிகழ்காலப் படிப்பினைகள், எதிர்கால எதிர்வுகூறல்கள், என்ற அடிப்படையில் தன் சிந்தனையில் உதித்த கவிதைகளைத் தேர்ந்து கவி மாலையாகக் கோர்த்திருக்கின்றார். தன்னிகர் இல்லாத் தமிழே, எழுத்தாணி முனையில், கார்காலப் புலர்வுகள், காற்று வெளியிடையே, எணை ஆச்சி, கடிகாரமே கதை கேளு, கனவுக் குறிப்பு, கார்த்திகை பூத்திருக்கிறது, தமிழும் நானும், மாலைப் பொழுதொன்றில், அவலத்தின் ஓலம், அவர்கள் ஆடம்பரக்காரர்கள், தவறிய பாதத் தடம், விடா முயற்சி, வேகம், ஓவியனும் வரைந்ததில்லை, என் தேடல், அந்த நிமிடங்களில் கரைகிறேன், தென்னங்கீற்றும் தென்றல் காற்றும், உலகத்தின் தூக்கம் கலையாதோ?, என்னுயிர் உன்னிடத்தே, அரச மரத்தடிப் பிள்ளையாரைக் காணவில்லை, நிசப்தங்களின் மீதூறும் உள்ளுணர்வுகள், வாழ்வு தேடும் நெஞ்சங்கள், பேரமைதி, வேர், நிலை மாறும் உலகம், கவிதையே உன்னைக் காதலிக்கிறேன், உணர்வுகளின் பாதையில், திருந்து பிறகு திருத்து, மரம், அலை மோதும் உள்ளம், புதிதாய் ஒரு விதி செய்வோம், நீ நான், கல்லாய்ப் போன மனிதன், வழித்தடங்கள், வாசல் தோறும் வேதனைகள், நிலம் கொத்திப்பறவைகள், அம்பன் புயலும் காகக் கூடும், வீழ்வேனென்று நினைத்தாயோ?, காவோலை, அன்பின் வழியது, நான் நானாகவே, குடிசையிலே வாழ்வோமே, உயர்ந்த இடத்தில், உன்னதமானவர்கள், வீணைகள் எரிகின்றன நரகத்தில், முன்பனி, முடிவறியாப் பயணம், மனிதன் நினைப்பதுண்டு, அலையாகுவேன் நீ கரையாகினால், சிறு விண்ணப்பம், இளைஞனே சற்று நில், ஏழைப் பாலன், தைமகள் பிறப்பு ஆகிய 55 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இதிலுள்ளன. இக்கவிஞர் யாழ். நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.