15528 குச்சொழுங்கைகள் காத்திருக்கின்றன.

அரியாலையூர் மாலினி மாலா. யாழ்ப்பாணம்: திறவுகோல் வெளியீட்டகம், நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

116 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 21×15 சமீ.

ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் மாலினி மாலாவின் தாய்நிலத்தின் மீதான காதலை இந்நூல் கவிதைகளாகத் தருகின்றது. தாயகத்தில் தான் வாழ்ந்த வாழ்க்கையை கவிதை மொழியில் கூறியுள்ள மாலினி மாலா, போரே தன் தாய்மண்ணிலிருந்து தன்னைப் பெயர்த்ததென்று வருந்துகின்றார். ‘மண் ஒழுங்கைகளும் வேலிக் கடவைகளும் அப்போது போல இப்போதும் நிழல் விழுத்திய நேசத்துடன் அரவணைக்கக் காத்திருக்கின்றன’ என்று உயிரும் உணர்வுமாகத் தன் தாய் நிலத்தின் மீதான ஏக்கத்தை தன் கவிதைகளில் வடித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்