15530 கையோடு கூட்டி வாங்க.

கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ். பாணந்துறை: துறையொளி இலக்கிய வட்டம், தொட்டவத்தை, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).

xii, (5), 18-120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-624-95131-0-5.

கவிஞர் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், பாணந்துறை தொட்டவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்விச் சேவையில் முதலாம் தர அதிபராகப் பணியாற்றி வருகின்றார். 1985இல் எழுத்துலகில் அறிமுகமான இவரது தீவிரமான எழுத்துப்பணி 1990வரை தொடர்ந்திருந்தது. அக்காலகட்டத்தில் பல சிறுகதைகள், கவிதைகள் இவரால் எழுதப்பட்டிருந்தன. நீண்டகால அஞ்ஞாதவாசத்தின் பின் 2014 முதல் மீண்டும் ஈழத்து இலக்கிய உலகில் தன் மீள்பிரவேசத்தை மேற்கொண்டுள்ளார். இந்நூலில் நபிவழியே நல்வழி, பொன்னாடை, காவல், நமக்குத் தெரிந்தவை, அனுமானை அழைத்து வாருங்கள், கையோடு கூட்டி வாங்க, தண்ணீர், அறிவியல் யுகத்தில், மகோன்னத சேவை, அடித்து நொறுக்க, ஆசியாவின் ஆச்சரியம், பிறஷர், காலம் மலர்ந்துள்ளது, கரைந்துபோகும் எதிர்பார்ப்புக்கள் என இன்னோரன்ன தலைப்புகளில் எழுதப்பட்ட 61 கவிதைகளை இடம்பெறச் செய்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Ce Migliori Slot Online

Blogs How to Victory Publication Of Inactive Free Ports: Tips and tricks – 5 lucky lions slot casino sites Standard Publication Away from Ra Info,