15533 சந்தனக் காடு: கவிதைகள்.

எஸ்.ஏ.ஸ்ரீதர் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கவிஞர் ஆமு.சி.வேலழகன் பவளவிழா சிறப்பு வெளியீடு, வாழைச்சேனை தமிழ் கலை, இலக்கிய மன்றம், விபுலானந்த வீதி, வாழைச்சேனை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).

114 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-41494-0-3.

கவிஞர் ஆமு.சி.வேலழகன் அவர்களின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்ட பவள விழாவின்போது அவரைப் புகழ்ந்து பாடப்பெற்ற 37 கவிஞர்களின் வாழ்த்துக் கவிதைகளைத் தொகுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கவிஞரும் தானறிந்த கவிஞர் ஆமு.சி.வேலழகன் அவர்களை தத்தமது கவிதை வரிகளுக்குள் சிறப்பாக பதிவுசெய்துள்ளார்கள். கவிஞர்கள் மூனாக்கானா, ஜின்னாஹ் ஷெரிபுத்தீன், பூவரசன், எஸ்.முத்துமீரான், காசி ஆனந்தன், எம்.எச்.எம்.புஹாரி, அகளங்கன், நீ.பி.அருளானந்தம், முகில்வாணன், நீலாபாலன், செ.குணரெத்தினம், அண்ணாதாசன், ஆ.தங்கராசா, க.தங்கேஸ்வரி, நிலா தமிழின்தாசன், மண்டூர் அசோகா, உடப்பூர் வீரசொக்கன், ஆரையூர் அருள், கோவிலூர் தணிகா, சிவானந்ததேவன், வாகரையூர் முகிலன், செ.பத்மநாதன், மு.தவராஜா, முனைக்காடு பா.இன்பராசா, ஞா.சிவானந்தஜோதி, வே.யோகேஸ்வரன், சுந்தரமதி வேதநாயகம், சண். தங்கராசா, க.கிருபாகரன், ஆ.ஜெயச்சந்திரன், ஆரையூர் தாமரை, ச.மதன், எஸ்.ஏ.ஸ்ரீதர், மா.நாகமணி, ஆ.நித்தியானந்தம், வன்னியூரன், பொன். அழகுசிவன் ஆகியோரின் வாழ்த்துக் கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Mega Joker Slot Online Zagraj w DEMO

Content Kiedy Mieć na afiszu przy Jednoręki Bandyta darmowo Wyjąwszy Rejestrowania się?: Slot secret forest Joker dwudziestu siedmiu – darmowy slot przez internet Jak pojawił

17252 குறைபாட்டுக் குழந்தைகள்/மனிதர்.

கணபதி மகேசன். யாழ்ப்பாணம்: க.மகேசன், 6, இராணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2003. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் ஓப்செட் பிரின்டிங், நல்லூர்). 10 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. நுண்ணறிவு,

14553 ஜீவநதி தை 2011: சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு-2011.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 72