15536 சான்றிதழ்க் கவியதிகாரம்-1.

வேதா இலங்காதிலகம். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xvi, 138 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14  சமீ., ISBN: 978-955-0958-37-5.

கோப்பாயில் பிறந்து, டென்மார்க்கில் வசித்துவரும் திருமதி வேதா இலங்காதிலகம் அவர்கள் முகநூலில்; வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு இலக்கிய முகநூல் அமைப்புகளினால் அங்கீகரிக்கப்பட்ட 83 கவிதைகளை இங்கே தொகுத்துள்ளார். குறித்த கவிதைகள் எந்தக் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்;பட்டவை என்பதையும், அதற்காக என்னவென்ன விருதுகள் வழங்கப்பட்டன என்றும் பதிவு செய்துள்ளார். பேசாத பொருளில்லை என்னும்படியாக பல்வேறு பொருண்மைகளில் வாழ்வியல் உண்மைகளைத் தம் கவிதைகளில் அள்ளி வழங்கி வாசிப்போர் உள்ளம் கவர்ந்திழுக்கும் இந்தப் படைப்புகள் எந்த புவியியல் சார்ந்தோ அரசியல் சார்ந்தோ இல்லாது எல்லா எல்லைகளையும்; தாண்டிப் பயணப்படுகின்றன. இந்தக் கவிதாயினி இந்தியாவின் காவிரி நீர்பிரச்சினை பற்றியும் தீயில் எரிந்த குழந்தைகள் பற்றியும் கவலை கொள்கின்றார். இயற்கையைப் பார்த்து மகிழ்கின்றார். இழிசெயல்களைப் பார்த்து ஆவேசம் கொள்கின்றார். சில மரணங்கள் அவரை தூங்கவிடவில்லை. உலகமெங்கும் நடைபெறும் நிகழ்வுகளும் அவை மீதான இவரின் பார்வைகளும் கருக்களாகியுள்ளன. இதுவரை ஆறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ள வேதாவின் ஏழாவது கவிதை நூல் இதுவாகும். இந்நூல் 149ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Slot Insanity 2024 Incentives and Review

Content Ozwin Local casino Incentive Rules Raging Bull Gambling establishment 25 no-deposit incentive Jackpot Financing Casino Bonus Codes How we View Betting Internet sites Preferred