பொத்துவில் அஜ்மல்கான். முல்லைத்தீவு: செந்தணல் வெளியீட்டகம், ஒட்டுசுட்டான், 1வது பதிப்பு, தை 2016. (வவுனியா: செந்தணல் பதிப்பகம், பண்டாரிக்குளம்).
(11), 12-51 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15.5 சமீ., ISBN: 978-955-7762-16-06.
ஒரு மனிதன் தனது சிறு வயது முதல் பட்ட கஷ்டங்களையும் வேதனைகளையும் கவி வரிகளாக சமூகத்திடம் ஒப்படைக்கும் திறன் எல்லோருக்கும் அமைவதில்லை. சிறிது சிறிதாக சிதறிய தனது கவித்துளிகளை ஒன்று சேர்த்து ‘சிதறிய சிறுதுளிகள்” என்னும் தனது முதல் படைப்பை கடந்த 10.01.2016 அன்று பசரிச்சேனை அல் இஸ்ராக் வித்தியாலயத்தில் வெளியிட்டு வைத்திருக்கிறார். தனது முதல் கவிதையாக தாய்மையைப் போற்றுகிறார். தொடர்ந்து வரும் கவிதைகளில் சமூகத்தில் ஒரு அங்கமாகி ஒரு சமூகப் பிராணியாக மாறி வாழ்வியலை, அவலங்களை, காதல், காதல்-தோல்வி என அனைத்தையும் அதில் நுகர்ந்துள்ளார்.