காத்தான்குடி றஹீம் (இயற்பெயர்: எச்.எம்.எம்.றஹீம்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).
(7), 8-69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-4628-09-0.
எண்பதுகளில் ஈழத்துக் கவிதைப் போக்கில் மாற்றம் ஏற்படுகின்ற தருணத்தில் மரபுக் கவிதைகளினூடாக தினகரனில் அறிமுகமானவர் காத்தான்குடி றஹீம். 90களில் சரிநிகரின் வருகையுடன் தன் பாடுபொருளிலும் மாற்றம் காண்கிறார். யுத்தத்தின் கொடுமைகளும் அடைக்கப்பட்ட தேசத்தினையும், சுதந்திர நடமாட்டம் தடுக்கப்பட்ட தெருக்களையும் குருதி படிந்த பள்ளிவாசலையும் பாடும் வகையில் அவரது கவிதைத் தளம் விரிகின்றது. இந்நூலில் இவரது கவிதைப் பரப்பின் குறுக்குவெட்டு முகத்தை தரிசிக்கமுடிகின்றது. தலை விரித்த முருங்கைமரம், கழுகு சுமந்து வந்த கோழிக்குஞ்சு, ஓலமிடும் இதயங்கள், ஏழு வெள்ளம் போடும் மாரி, குட்டித்தாய்ச்சி, வா வந்து சுடு, சிவப்பு இரவு, மண்டை ஓடுகளும் சில எலும்புக் கூடுகளும், விலங்குகளுக்குள் முடிக்கப்பட்ட என் சுதந்திரம், நான் ஆவலாய் எதிர்பார்த்த நட்சத்திரங்கள், தூண்டில் பொறுத்த மீன் மாதிரி நான், தலைப் பாரமிறக்கி, எனது சோற்றுப்பானை பற்றிய இரவு, ஆத்மாவுக்கு தூண்கள் தரும் சங்கிலித் தெடர்கள், எரிவும் பிரிவும், அழைப்பு, புதுக்கவிதை, முடிவுக்குள் ஒரு விடிவு, ஏய் நிலவே, சகோதரரே இரங்குங்கள், ஒரு ஏழ்மை பேசுகிறது, என்னுடைய புதிய பாதை, அன்புத் தங்கையே ஆகிய தலைப்புகளில் இவர் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.