செல்வமனோகரி சிவானந்தன். யாழ்ப்பாணம்: மீளுகை -2, 1வது பதிப்பு, மார்கழி 2020. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன்).
xiv, 81 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-624-97477-0-8.
இந்நூல் கவிஞர் மனோகரியின் இரண்டாவது கவிதைத் தொகுதி. நூல் முழுவதும் உள்ள கவிதைகளின் வியாபகம் ஒரு நதியின் பயணமாகவே அமைந்துள்ளது. காட்டாறு, நரைநதி, கரைகளுடன் நதி, நதிகள் பின்நோக்கிப் பாய்வதில்லை, சுயவெளிகள், ஏவாள்களும் (ஏ)மாற்றங்களும், தெளிவு, பிரத்தியட்சங்கள், கிரிசாம்பாள், வேற்றாள், சிதிலங்கள், கூழாங்கற்கள்-1, கூழாங்கற்கள்-2, அஸ்பென்கள், வரையறைகள், தகரும் நியதிகள், சிலுவை, குறுக்கம், பிரிய சினேகிதிக்கு, அந்நியங்கள், ஆன்ம தவங்கள், சேணங்களுடன் நதி, மலை(ழை)யின் கண்ணீர், உவகை மிக்கேன், விருது, உறைதல்கள், பிரிவு சொல்லி, அழைப்பு, அன்னை சாரதாதேவி, அத்வானத்திலோர் தவம், பிரிய தேவதை, அஞ்ஞாதவாசம், உழைப்பை ஒழிப்போம், கொரொனா, வெறுமை, துளசிச் செடி, ஆண்குயில் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட மனோகரியின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.