15547 சொற்களிலே சுழலும் பிரபஞ்சம்.

டீன் கபூர் (இயற்பெயர்: அப்துல் கபூர் றபீஉத்தீன்). மருதமுனை 06: கிடுகு: தணிக்கைகளற்ற உரையாடல் வெளி, 362 A/3, ஹாஜியார் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2019. (அக்கரைப்பற்று -02: சிற்றி பொயின்ற் பிரின்டர்ஸ், 78/1, உடையார் வீதி).

ix, 70 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-3547-05-7.

கவிஞர் டீன் கபூர், கிழக்கிலங்கையில் மருதமுனை எனும் கிராமத்தைச் செர்ந்த ஓர் இலக்கியச் செயற்பாட்டாளர். ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர், தொண்ணூறு களிலிருந்து கவிதைப் பிரதிகளை வடிவமைப்பதில் தனது சிந்தனா உழைப்பைச் செலவழித்து, தமிழ் இலக்கியப் பரப்பிலே ஊடாடி வருபவர். குரோட்டன் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007) என இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இது இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பாகும். இக்கவிதைத் தொகுப்பு பற்றி குறிப்பிடும் இமாம் அத்னான் ‘இப்பிரதிகள் ஒவ்வொன்றும் வாசகர்களிடம் சில கயிற்று முனைகளைத் தருகின்றன. அவற்றைப் பற்றிக் கொள்பவர்களுடன் பிரதியின் எல்லைக்குள் புதிர் விளையாட்டைத் துவக்குகின்றன. சொற்களின் பின்னல்களுக்குள் புனைவின் சாத்தியங்கள் கிளர்ந்தெழுகின்றன. நீங்கள் எப்படி விளையாடுபவர் என்பதைப் பொறுத்து பிரதிகள் ஒவ்வொன்றும் கிளைத்து நீள்கின்றன’ என்று பதிவுசெய்கின்றார்.

ஏனைய பதிவுகள்

14420 மும்மொழிச் சொற்களஞ்சியம் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்).

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: நிறுவன அபிவிருத்திப் பிரிவு, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2010. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). xxxv, 154 பக்கம், விலை: ரூபா 380.00, அளவு: