15551 தூறல்.

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்கள். யாழ்ப்பாணம்: தமிழ் மன்றம், யாழ்/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, சண்டிலிப்பாய், 1வது பதிப்பு, வைகாசி 2008. (யாழ்ப்பாணம்: ஆர்.எஸ். பிரின்டர்ஸ், சண்டிலிப்பாய்).

viii, 37 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

யாழ்/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மாணவர்களின் கவித்துவ வெளிப்பாடாய் புலர்ந்துள்ளது தூறல் என்ற இக்கவிதைத் தொகுப்பு. தம் உள்ளத்தில் பதிந்து கருவாகிய விடயங்களை தமது இயலுமையின் நிலை நின்று இவ்விளம் படைப்பாளிகள் கவிதைகளாய்ப் பிரசவித்துள்ளனர். இத்தொகுப்பில், தரம் 11இல் பயிலும் க.சோபிகா, த.கடோற்கஜன், ந.துஷாந்தி ஆகியோரும், தரம் 12இல் பயிலும் அ.சுபாசினி, ர.ரகீதா, ச.கலையரசி ஆகியோரும், தரம் 13இல் பயிலும் லோ.கம்சலா, தி.சுரேஸ், ச.கஜேந்திரன், த.வித்தியா, ச.டனுஷா, சி.சரூபன், அ.டில்லிபவீனா ஆகியோரும் தத்தம் கவிப் பங்களிப்பினை நல்கியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Paysafecard Casino

Content Casinon Tillsammans Nya Teman: Gold Rally kasino Kan Jag Prova Kostnadsfri Kungen Momang Casino? Ytterligare Betalningsmetoder Ino Sverige Testa Casino Online Lätt Via Mobilen