15554 தொப்புள்கொடியும் தலைப்பாகையும்.

அன்புடீன் (இயற்பெயர்: கலந்தர் முகைதீன்). அட்டாளைச்சேனை: கவிதாலய கலை இலக்கிய மண்டலம், 1வது பதிப்பு, மார்ச் 2016. (சாய்ந்தமருது: எக்செலென்ட் பிரின்ட்).

xv, 219 பக்கம், விலை: ரூபா 390.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-954-43029-0-7.

அம்பாரை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேசம் பாலமுனை கிராமத்தில் பிறந்தவர் கவிஞர் அன்புடீன். முகங்கள் (1988), ஐந்து தூண்கள் (2000), சாமரையில் மொழி கலந்து 92002), ஆகிய கவிதை நூல்களுடன் நெருப்பு வாசல் (2011) என்ற சிறுகதைத் தொகுதியையும் படைத்தவர். இலக்கிய மணம் கமழும் கிழக்கு மண்ணிலிருந்து கவிபாடும் பல கவிஞர்களுள் தனித்துவமான பாணியில் எழுதுபவர் இவர். அன்புடீன் கையாளும் கவிதைப் பொருள் முற்றாக சமூகம் சார்ந்தது தான். சமூகம், சமயம், வாழ்க்கை, காதல், என்று எதைப் பற்றிப் பாடினாலும் புதிய சமூக இயல் வடிவங்களின் கண்ணோட்டத்தில் அவற்றைக் கவிதையாக வடிப்பதில் திறன் மிக்கவர். இத்தொகுதியில் அதன் பிரதிபலிப்பு தெரிகின்றது. சமுதாயத்தில் இவர் காண்பவை, இவரை ஈர்ப்பவை, உறுத்துபவை எல்லாம் இவர் உணர்வுகளிலிலிருந்து கவிதைகளாக வெளிவருகின்றன.

ஏனைய பதிவுகள்