கனகசூரியம் யோகானந்தன். திருக்கோணமலை: நர்த்தனா வெளியீட்டகம், இல. 101/8, கந்தசுவாமி கோவில் வீதி, 1வது பதிப்பு, 2018. (மஹரகம: மில்லெனியம் கிராப்பிக்ஸ், 30/7, 5ஆவது ஒழுங்கை, அம்பகஹபுர).
(7), 8-104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-0328-01-7.
கவிஞர் க.யோகானந்தன் திருக்கோணமலை மாவட்டத்தில் சம்பூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பாடசாலை அதிபராகப் பணியாற்றும் இவர் இலக்கியத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 2006இல் ‘உண்மை என்றும் உயிர்பெறும்’ என்னும் கவிதை நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுக்கொண்டவர். இத் தொகுப்பில் இவரது குருட்டு நாள், மழலை, முன்னொரு காலம், மௌன இரவுகள், வாழ்க்கை முட்கள், புதைந்துபோன மானுடம், மனிதன் பூப்பான், கனவுகள், காலமுட்கள், தாயக நினைவுகள், என்னைப் புதைத்து விடுங்கள், இரவுகள், ஈரம் காயவில்லை, புதிய கூடுகள், புதுவைக் கவிஞன் நீ, விஷமழை, நேசக் கரங்கள், காத்திருப்பு, நிழல் வாகை மரம், தென்றலை முகர்ந்தபடி, முதுசங்கள், அன்பு மகனுக்கு, மண்ணும் நீரும், மரண பயம், நதியில்லா ஓடம், மாற்றம், அந்தி நேரம், மலையகம், கவிதை, சுயம்வரம், விடியல், மாற்றம், இனிய வதனம், தமிழ் மொழி, நட்பு, அதிசயம், துயரங்கள், தாய்மை, மனப் பெட்டகம், மரங்கள், மழைக்காலம், பண்டிகைகள், என் கண்கள் மட்டும், பிறப்பு, மண்ணறைகளில், என்ன அதிசயம், எதிர்கால ஸ்ரீலங்கா ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகள் இடம்பெற்றுள்ளன.