வேலணையூர் தாஸ் (இதழாசிரியர்), சி.கிரிஷாந், ஜெ.வினோத் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: யாழ். இலக்கியக் குவியம், 37, 2ம் குறுக்குத் தெரு, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஆனி 2012. (யாழ்ப்பாணம்: மெகா டிஜிட்டல், கண்டி வீதி, கச்சேரியடி).
48 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.
ஈழத்துக் கவிதைப் பரப்பில் இளம் கவிஞர்களை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சியாக வெளிவந்துள்ள கவிதை இதழ். முகநூல் பதிவுகளாக (Facebook) வெளிவந்திருந்த தரமான கவிதைகளைத் தேடித் தொகுத்து பல்லிதழ்ப் பதிப்புகளாக வெளியிடும் முயற்சியின் இரண்டாவது படி நிலை இதுவாகும். சமூகத்தின் எழுச்சிக்கு கவிதைகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்ற உணர்வூட்டுதலுடன் வெளிவந்துள்ள இவ்விதழில் பி.அமல்ராஜ், தி.திருக்குமரன், கு.றஜீபன், த.அஜந்தகுமார், கௌசி-யாழ், ந.சத்தியபாலன், ஷோகி உஸ்மான், வேலணையூர் தாஸ், மன்னூரான், ஜே.எஸ்.ராஜ், மதுஷா மாதங்கி, கிரிஷாந், கஷலிஷாப் பித்தன், அமிர்தம் சூர்யா, அய்யப்ப மாதவன், எஸ்.மதி, பா.சுமணன், த.எலிசபெத், ஹேமி கிருஷ், வெற்றி துஷ்யந்தன், டுஷாந்திகா சுகுமார், கி.பிறைநிலா, நிந்தவூர் ஷிப்லி, சிவனேஸ்வரன் பிரியங்கனி, அ.உமா, யோ.நித்யா, ந.மணிகரன், துவாரகன், ஹட்டன் சுந்தர், நெடுந்தீவு முகிலன், நேற்கொழுதாசன், கயல்விழி வின்சன், வே.இந்து ஆகிய படைப்பாளிகளின் கவிதைகள் அழகான காட்சிப்பட இணைப்புகளுடன் இடம்பெற்றுள்ளன.