15561 நான் மூச்சயர்ந்த போது.

எஸ்.யூ. கமர்ஜான் பீபீ. வத்தளை: எஸ்.யூ. கமர்ஜான் பீபீ, 1272/3, சிறில் ராஜபக்ஷ மாவத்தை, ஹீணுப்பிட்டிய, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (கல்முனை: அன்-நூர் பிரின்டர்ஸ்).

(16), 75 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-38333-0-3.

இந்நூலிலுள்ள  கவிதைகள் பரந்துபட்ட 52 தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆரம்பக் கவிதைகள் ஆன்மீகம் சார்ந்தவை. முஹம்மது நபியவர்கள், நோன்பு, ஹாஜிகள், முஹர்ரம் போன்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. தொடர்ந்து வரும் கவிதகைளாகத் தனது தாய், மகன், மகள், கணவர் போன்ற உறவகளுக்கு கவிதை வழியாகத் தன் அன்பைத் தெரிவித்திருக்கிறார். இளைஞர்களுக்கான அறிவுரையாக ‘சிந்திக்காத போது’ என்ற கவிதை  அமைகின்றது. ‘சோம்பலின் போது’ என்ற கவிதை குறியீட்டுப் படிமங்களால் ஆனது. சமூகத்தில் மலிந்திருக்கும் ஒட்டுமொத்த சோம்பேறிகளுக்கும் சாட்டையடியாக இக்கவிதை அமைகின்றது. இறுதியில் ‘நன்றியை உரக்கச் சொல்தல்’ என்று தலைப்பிட்டு முடித்திருக்கிறார். எண்பதுகளில் தன் கவிதைப் பிரவேசத்தினூடாக பலராலும் அறியப்பட்டவர் கமர்ஜான் பீபீ. மூன்று தசாப்தங்கள் கடந்து வந்து, இக்கவிதைத் தொகுதியின் மூலம் தனக்கான விசாலமான அடையாளத்தை கவிதைப் பரப்பில் பதிந்துவிட்டிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Angeschlossen Casino Tests für Deutschland 2024

Content Wafer Zahlungsmethoden man sagt, sie seien akzeptiert? Beschwerden unter einsatz von Magical Spin Spielbank ferner ähnliche Casinos ( Das Glücksspieler hat inoffizieller mitarbeiter JackpotCity