15563 நிகழ்கால நிஜங்கள்.

நிரோசினி குபேந்திரன். யாழ்ப்பாணம்: துளிர்கள் வெளியீடு, உள சமூக மேம்பாட்டு நிறுவனம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 383/16,கோவில் வீதி, நல்லூர்),

iv, 50 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20×14.5 சமீ.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவியுமான நிரோசினியின் முதலாவது கவிதைத் தொகுப்பு இது. இக்கவிதைத் தொகுப்பின் வரவு பற்றி ‘இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ விம்பங்களைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு மனிதனை நோக்கும்போதும் அவனுக்குள் அற்புதமானதொரு மனம் இருப்பதை நாம் கவனிக்கவேண்டும். அந்த மனதினுள் எத்தனையோ உணர்வுகள் மறக்க முடியாத நினைவுகள், தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையில் மனித மனம் மரத்துக் கிடக்கின்றது. அத்தகைய மனத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளை ஆக்கியுள்ளேன்’ என்கிறார். என் பேனா முனையில் நான், இன்றே விழித்தெழு, வெற்றியின் வித்து, வாழ்க்கை, சமாதானம் நிலைத்திட வேண்டும், நான் வருவது எப்போது?, மாமர ஊஞ்சல், வரதட்சணை, உன்னைத் தேடி வருவேன், வேதனை அறியாயோ?, கல்லறைப் பூக்கள், மரங்களை நாட்டுவோம், இதயம், இரத்த தானம், மாற்றம் ஏன்?, உறவுகள் எனக்குண்டு, மரணத்தில் கூட சுகம் காண்பேன், உண்டு, உலகம் திருந்துமா?, விஷச் செடி, கடிகாரம், விடியல் எப்போது?, புரிந்துகொள், தனிமை, என்னவள், யுத்தம், மௌனம், பெண்ணே விழித்திடு, மழை, தேடல், இருளடைந்த வாழ்வு, தொலைந்த கனவு, நாட்குறிப்பேடு, காற்று, புரியாத புதிர், ஆறு, அறிவூட்டும் ஜீவன்கள், அவனா அவளா?, திருமணம், வேலையில்லாப் பட்டதாரி, வான தேவதையும் காற்றும், மலராத வாழ்வு, வேண்டும் ஆகிய தலைப்புகளில் தனது கவிதைகளை இங்கு படையலிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12612 – உயிரியல் திரட்டு Block 2 (Unit 2) புதிய பாடத்திட்டம்.

கே.வி.குகாதரன், ஆர். நரேந்திரன். கொழும்பு 13: குளோபல் பப்ளிக்கேஷன்ஸ், 195, ஆதிருப்பள்ளித் தெரு (Wolfendhal Street), 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (Colombo 13: Global Printers,195, Wolfendhal Street) (6), 329 பக்கம்,