15565 நிரம்பி வழியும் நிசப்தம்.

பைசல் பரீத். புத்தளம்: பெருங்காடு பதிப்பகம், 140, ரசூல் நகர், நாகவில்லு, பாலாவி, 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xvii, 123 பக்கம், விலை: ரூபா 275., அளவு: 22.5×16 சமீ., ISBN: 978-955-4007-00-0.

இந்தக் கவிதைத் தொகுதி முழுவதும் தாயக நிலமான வடபுலத்தின் வேரறுந்த வலி படர்ந்திருக்கின்றது. ஆனால் இக்கவிஞர் நிராசைகளால் நிரம்பியவரல்லாமல் நம்பிக்கையின் ஒளிவீச்சை இக்கவிதையின் வார்த்தைகளுள் தீச்சுவாலையாய்ப் பிரகாசிக்க வைக்கிறார். இவரிடமுள்ள விரிந்த சர்வதேசப் பார்வையும் இஸ்லாமிய நோக்கும் இக்கவிதைகளிலும் பளிச்சிடுகின்றன. மன்னார் அகத்திமுறிப்பை பூர்வீகமாகக் கொண்ட இக்கவிஞரின் பிறப்பிடம் குருணாகல பரகஹதெனியவாகும். ஆரம்பக் கல்வியை அங்கும் பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரி, பேருவளை ஜாமியா நளீமிய்யா ஆகியவற்றிலும் பெற்றுக்கொண்டவர். ‘நிரம்பி வழியும் நிசப்தம்’ என்ற இக்கவிதைத் தொகுதியில் பைஸல் பரீதின் கவிமொழியும் கற்பனை வளமும் இசைநயமும் நிரம்பி வழிகின்றது. நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு மேலெழும் கவிஞனின் உள்மனப் போராட்டம் இத்தொகுதியின் வார்த்தைகளுள் மடக்கிப் பிடிக்கப்பட்டிருக்கின்றது’ (சிராஜ் மஷ்ஹூர், அணிந்துரையில்).

ஏனைய பதிவுகள்

Novomatic Ports Online

Articles Deciphering The book Out of Ra Miracle Extra Has Publication Away from Ra Wonders Rtp Book From Ra Miracle Evaluation Play Cash Partnership Around