15568 நினைவொன்றே போதும்.

பீ.ரீ.அஸீஸ். கிண்ணியா 7: பாத்திமா றுஸ்தா பதிப்பகம், 46/3, பெரியாற்றுமுனை, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

viii, 9-72 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-0715-14-5.

பீ.ரீ.அஸீஸ் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. உள்ளத்து உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் இவரது 43 கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. தன் வாழ்நாளில் இவர் கண்டனுபவித்த நிகழ்வுகள், தனது மனதைக் குடையும் உண்மைச் சம்பவங்கள் என்பன இங்கு கவி வடிவாகிச் சிந்தனைச் சிதறல்களாக பட்டுத் தெறித்திருக்கின்றது. இந்நூலில் இவரது கவிகளில் சமூக சர்வதேச பார்வைகள் தூக்கலாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. ‘முன்னோடிகள்’ கலை இலக்கிய வட்டத்தின் தலைமைப் பதவியிலிருந்து முற்போக்கான இலக்கியப் பணிகளாற்றி வருகின்ற கவிஞர் பீ.ரீ.பீரிஸ் அவர்களின் இலக்கியப் பணிகள் விதந்து கூறத்தக்கவை.

ஏனைய பதிவுகள்

12425 – நித்திலம்: தமிழ் மொழித்தினவிழா மலர் 1998

எஸ்.எதிர்மன்னசிங்கம் (தொகுப் பாசிரியர்). திருக்கோணமலை: வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்). (14), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.