கவிப்பிரகா (இயற்பெயர்: குணரெத்தினம் தனுஷன்). நெடுந்தீவு: குணரெத்தினம் தனுஷன், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (நெடுந்தீவு: பப்பிட்டர் ஸ்டூடியோஸ்).
(14), 108 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-97399-0-1.
யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட தனுஷன், யாஃபரியோவான் கல்லூரியின் பழைய மாணவனாவார். நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தனது முதலாவது கவிதைத் தொகுதியில் தன் உள்ளக்கிடக்கையை, அனுபவத்தை, ஏக்கத்தை இங்கே கொட்டியிருக்கின்றார். இது இவரது கன்னி முயற்சி. தனது மனதிலே பட்டவற்றை இங்கே வரிகளாக்கி கவிதைகளாகப் பதிவுசெய்துள்ளார். காதல், உறவு, பயணம், மரணம், போர், முதுமை, இயற்கை, கொடூரம் என பல்துறைப் பார்வையை இங்கே பதிவாக்கியுள்ளார்.