15573 படைகளின் வரவால்.

சசி மகரிஷி. ஐக்கிய அமெரிக்கா: iPMCG வெளியீடு, வெளியீட்டுப் பிரிவு, Suite No. 100, 3311 Beard Road, Fremont, California, CA 94555, 2வது பதிப்பு, ஜனவரி 2019, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (மட்டக்களப்பு: வணசிங்கா அச்சகம், 496A, திருமலை வீதி).

(2), 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-9863148-6-5.

பாண்டிருப்பைச் சேர்ந்த இலக்கியவாதியான அமரர் சண்முகம் சிவலிங்கம் அவர்களின் இரண்டாவது புதல்வரான சசி மகரிஷி வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ள இவர் முன்னர் கல்முனைப் பிரதேசத்தில் ‘நவதர்ஷிகள்” என்ற கலை இலக்கிய அமைப்பினை உருவாக்குவதில் முன்நின்று செயற்பட்டவர். நிலவிடம், ஒரு செவ்வாய் இரவு, ஒற்றை நட்சத்திரம், மரண விளிம்பில், அகாலத்தில் அவளுக்கொரு கடிதம், வேதனைச் சுவடுகள், சிலுவை சுமப்பு, பதட்டமான பகற்பொழுது, எங்கள் இரவுகளில், நாய்கள் குரைத்து விடிதல், படைகளின் வரவால், கல்லாகி விட்டேன், தேடல், மனம், வெறுமைஸ்ரீமுழுமை, ஊருக்கு வருவேன், உள்ளுக்குள்ளே, காதல் வந்தால், அழகு, என் சின்ன மகளும் எங்கள் புழுதி மண்ணும், எழுந்தே நின்ற எழுது கரத்திற்காக, கோடுகள், தோற்றுப்போதல், கட்டியம், முள்ளிவாய்க்கால், இன்னுமா அடங்கவில்லை?, ஒளி கண்டும், உயிர்த்தெழுதலுக்காக, சில்வண்டு நினைவுகள், எரிகிறது எரிமலைப் பொறி ஆகிய முப்பது கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகின்றது. இவரது படைப்பின் பல கவிதைகள், போர்;க்கால அவலங்களையும், அனுபவங்களையும் வெளிப்படையாகவும் துணிச்சலுடனும் பேசுகின்றன.

ஏனைய பதிவுகள்

Casino Review

What is cryptocurrency mining Best cryptocurrency Casino Review For beginners, it’s essential to understand what makes cryptocurrency unique, familiarize yourself with common trading concepts such