15580 போகிற போக்கில்.

பூகொடையூர் அஸ்மா பேகம். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(10), 11-104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-30-8875-8.

பூகொடையூர் அஸ்மா பேகம் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. பேராதனைப் பல்கலைக் கழகத்தின் புவியியல் விசேடதுறைப் பட்டதாரியான இவர் ஒரு டிப்ளோமா பட்டதாரி ஆசிரியையாவார். தனக்கென்று தனித்துவமான சொற்செட்டுமிக்க கவிதைகளை இவர் இத்தொகுப்பில் இணைத்துள்ளார். இவரது முதலாவது கவிதைத் தொகுதி ‘செங்குருதியும் பச்சோந்தியும்’ புரவலர் புத்தகப் பூங்கா வெளியீடாக முன்னர் வெளிவந்தது. ‘போகிற போக்கில்’ இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும்.

ஏனைய பதிவுகள்

11206 கந்தர் மாவை வெண்பா.

மா.குமாரசாமி. மாவிட்டபுரம்: மாவை ஆதீனம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. சுன்னாகம் மயிலணி சைவ