காத்தநகர் முகைதீன் சாலி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(15), 16-112 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-30-8384-5.
இக்கவிஞர் தான் கடந்த வந்த வாழ்வியல் தந்த அனுபவங்கள், அவருக்குள் அவை ஏற்படுத்திய தாக்கங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள் என்பவற்றை தனக்கான ஒரு கவிதை மொழியில் இங்கு பதிவுசெய்திருக்கிறார். ‘வானம்பாடி’ கவிதை இயக்க வழியாகத் தோன்றிய கவிஞர்களின் கவிதை நடையுடன் 80களுக்குப் பின்னரான ஈழத்து நவீன தமிழ்க் கவிதை தந்த நடை கலந்த நிலையில் அவருடைய உள்ளடக்கங்கள் பேசப்பட்டுள்ளன. பெண்ணியம், இன ஒருமைப்பாடு, மனிதநேயம் என்பனவற்றைப் பற்றியும் பல கோணங்களில் இத்தொகுப்பின் கவிதைப் பிரதிகளில் இவர் பேசி இருக்கின்றார்.