15584 மழை நின்றபோதும்.

காத்தநகர் முகைதீன் சாலி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/663/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

(15), 16-112 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-30-8384-5.

இக்கவிஞர் தான் கடந்த வந்த வாழ்வியல் தந்த அனுபவங்கள், அவருக்குள் அவை ஏற்படுத்திய தாக்கங்கள், உணர்வுகள், உணர்ச்சிகள் என்பவற்றை தனக்கான ஒரு கவிதை மொழியில் இங்கு பதிவுசெய்திருக்கிறார். ‘வானம்பாடி’ கவிதை இயக்க வழியாகத் தோன்றிய கவிஞர்களின் கவிதை நடையுடன் 80களுக்குப் பின்னரான ஈழத்து நவீன தமிழ்க் கவிதை தந்த நடை கலந்த நிலையில் அவருடைய உள்ளடக்கங்கள் பேசப்பட்டுள்ளன. பெண்ணியம், இன ஒருமைப்பாடு, மனிதநேயம் என்பனவற்றைப் பற்றியும் பல கோணங்களில் இத்தொகுப்பின் கவிதைப் பிரதிகளில் இவர் பேசி இருக்கின்றார்.

ஏனைய பதிவுகள்

17160 தோத்திரப் பாடல்கள் 1996.

ச.ஜயசீலன், பத்திருநாதன், பாலசுப்பிரமணியம், யசோதா சின்னத்தம்பி. கொழும்பு 6: ச.சிவகுமார், வெள்ளவத்தை, 2வது பதிப்பு, 1996. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (6), 32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

17994 கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்: அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்.

மாலன். (தொகுப்பாசிரியர்). சென்னை 600018: சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, 2015. (சென்னை 1: இம்பீரியல் கிராப்பிக்ஸ்). 176 பக்கம், விலை: இந்திய ரூபா 110.,