15587 மனித விலங்கொன்றின் நாட்குறிப்பிலிருந்து (புதுக்கவிதை).

அனாதியன் (இயற்பெயர்: ஜெகதீஸ்வரன் மார்க் ஜனார்த்தகன்). கனடா: படைப்பாளிகள் உலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

xviii, 96 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-3981-00-5.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கவிஞர் அனாதியன். மல்லாவி மத்திய கல்லூரி, யோகபுரம் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்த இவர் போர் நெருக்கடிகளால் புலம்பெயர்ந்த பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார். ‘ஒரு வேள்வியாட்டின் விண்ணப்பம்’ என்ற இவரது முதலாவது கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து ‘சீயக்காய் வாசக்காரியும் சில்வண்டுக் காதலனும்’  என்ற இரண்டாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டவர். இது இவரது மூன்றாவது கவிதைத் தொகுதியாகும். புண்பட்டவள், முதிர்ந்த காளையர்கள், காற்றிடைவெளிகளை நிரப்பும் கனவுகளின் பாடல், தூரிகை தெளிக்காத துயரின் பாடல், வீரத்தின் நிறம், இரண்டு தோட்டாக்கள் என இன்னோரன்ன தலைப்புகளில் எழுதப்பட்ட 43 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Ironman Publication Fishing OSRS Wiki

Posts Definitely Useful Fish Information: Seafood and other Wild-Caught Fish Supremely leisurely up until various other motorboat fireplaces for you otherwise the regional volcano explodes