15589 மஹாகவி கவிதைகள்.

து.உருத்திரமூர்த்தி (மூலம்), எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மஹாகவி நூல்வெளியீட்டுக் குழு, இணை வெளியீடு, பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜீன் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

444 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5881-02-4.

மஹாகவியின் கவிதைகளின் பெருந்தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூல் மஹாகவியின் (1927-1971) ஐம்பதாவது நினைவுதினத்தினை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நூல் தொகுப்புகளில் ஒன்றாகும். இதில் 1943-1949 காலப்பகுதிகளில் அவர் எழுதிய காட்டு மல்லிகை, வானகம், காட்டுமுல்லை, தென்றல், யன்னல், புத்தகம், காதலுளம், வேண்டுவது, சுணக்கம் ஏன்?, யாழ்ப்பாணம், எங்கள் ஊர், இரவு, அன்பினால் ஒன்றாகி, காதலியாள், முத்தம், கவிஞர், அழாதே, கியூ வளர்க நீண்டு ஆகிய 18 கவிதைகளும், 1950-1959 காலப்பகுதிகளில் எழுதிய 56 கவிதைகளும், 1960-1971 காலகட்டத்தில் எழுதிய 34 கவிதைகளும், குறும்பா, பொருள் நூறு, இசைப்பாடல்கள் (மீனவர் பாடல், மாநிலத்துப் பெருவாழ்வு, வேலன்-வள்ளி பாடல்கள்), பிஞ்சுப் பாடல்கள், மொழிபெயர்ப்புகள், பா உரைகள், வாழ்த்துக்கள், கடிதங்கள் என்பவையும் தொகுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெளிவந்த தொகுப்புகளில் இடம்பெற்ற கவிதைகளுடன் இதுவரை தொகுக்கப்படாத அநேக கவிதைகளும், சிறுவர்களுக்காக அவர் எழுதிய பிஞ்சுப் பாடல்களும் இசைப் பாடல்களும் இதில் அடங்குகின்றன. இந்நூல் 188ஆவது ஜீவநதி பிரசுரமாக வெளியீடு கண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Winner 150 Rotiri Gratuite

Content Tipuri Să Jocuri Întâlnite Spre Ofertele Care Rotiri Gratuite Însă Achitare Winner 150 Rotiri Gratuite Bonus Să Materie Venit Winner: 680 Rotiri Gratuite Către

12924 – ஆசிரியமணி:அ.பஞ்சாட்சரம் அவர்களின் பாராட்டுவிழா மலர்.

மலர்க் குழு. உரும்பிராய்: ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் அவர்கள் பாராட்டுவிழாச் சபை, சைவத் தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (44), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24