15592 முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை கவிதைகள் (விழா மலர்-1).

கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை. சுன்னாகம்: கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்களின் எண்பத்தாறாம் ஆண்டு நிறைவுவிழாக் குழு, மயிலணி, 1வது பதிப்பு, 1986. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்).

xiv, 144 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 18.5×13.5 சமீ.

முத்தகச் செய்யுள் இயற்றுவதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவரான வரகவி முத்துக்குமார கவிராயர் வழித்தோன்றலாய்ப் பெரும் புகழோடு விளங்கிய சுன்னாகம் திரு குமாரசாமிப் புலவரின் மகனாகிய கு. முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை (பிறப்பு: 15.03.1900) அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு. தோத்திரம், இலக்கியம், இயற்கை, நாடு, வாழ்த்து, தமிழ், இரங்கல் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் இவரது கவிதைகள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இவர் சைவ வித்தியாவிருத்திச் சங்கப் பாடசாலைகளில் 25 வருடங்கள் அதிபராகப் பணியாற்றி 15.03.1960இல் இளைப்பாறியவர்.

ஏனைய பதிவுகள்

12095 – இந்து தருமம் 1993-1994.

மரியாம்பிள்ளை ரவிச்சந்திரன் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை). xviiஇ 103 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12539 – நன்னூற் காண்டிகையுரை

பவணந்தி முனிவர் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சதாசிவப்பிள்ளை, நல்லூர், 1வது பதிப்பு, சித்திரை 1880. (சென்னபட்டணம்: வித்தியானுபாலன யந்திரசாலை). (6), 400 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 19×11.5 சமீ.