காத்தவூர்க் கவி ஜீனைட் எம்.பஹ்த். காத்தான்குடி-2: முஹாஸபா நெட்வேர்க், இல. 24/2, சரீப் புரக்டர் ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (காத்தான்குடி 2: கபீர் அச்சகம், இல. 26/2, எஸ்.பி.ரோட்).
80 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-3160-00-5.
கிழக்கிலங்கை, காத்தான்குடியைச் சேர்ந்தவர் ஜ{னைட் எம்.பஹ்த். ஊடகவியலாளராக, குறும்பட நடிகராக, கலைஞர், கவிஞர் எனப் பல்பரிமாணம் கொண்டவர். ஆசிரியரின் முதலாவது கவிதைத் தொகுப்பு இது. தன்னைச் சூழ்ந்த உலகின் மனித வாழ்வின் நிகழ்வுகளை, நீதிகளை, நியாயங்களை, ஆச்சரியங்களை, அதிசயங்களை, அனுபவங்களை, ஆராய்ச்சிகளை, ஒரு சராசரி மனிதனின் பார்வையில் இருந்து விலகி, கவித்துவமாகப் பார்க்க முயன்றுள்ளார்.