கோண்டாவிலூர் மது. கோண்டாவில்: மதுசுதன், புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: கங்கை பிறின்டர்ஸ்).
xv, 62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 160., அளவு: 21×15 சமீ.
இயற்கையின் அழகு, பெண்ணழகு, தமிழழகு, காதல், போர் வடுக்களின் வேதனை, தாயின் தவிப்பு என பல்வேறு சுவையான விடயங்களை இவரது கவிதைகள் தாங்கிவருகின்றன. செல்வன் மதுசுதனின் முதலாவது கவிதைத் தொகுப்பு இது. முப்பது கவிதைகளுடன் வெளிவந்துள்ளது. பல்கலைக்கழக விவசாய பீடத்தின் மாணவர் என்பதால், அந்த வயல்வெளி, விவசாய மறுமலர்ச்சி என விவசாயம் பற்றியும் கவிதை பாடுகிறார். அதில் அசேதன உரங்களின் பாவனைத் தாக்கம் பற்றி அழகாக களையெடுக்க நேரமில்லை/ மருந்தடிக்க நேரமுண்டு/ நாளை-மருந்தெடுக்க நேரமுண்டோ என்கிறார். அவளா அந்த முதியோர் இல்லத்தில் என்ற கவிதையில் தாய்மாரின் இறுதிக் காலத்தை முதியோர் இல்லங்களில் வாழவிடப்படும் தனையர்கள் பற்றிக் குரல் எழுப்புகிறார்.