15596 முருகையன் கவிதைகள்.

இ.முருகையன் (மூலம்), கு.றஜீபன், க.தணிகாசலம், ச.தனுஜன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 2021, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

xxxii, 1080 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-955-7331-08-9.

கவிஞர் இ.முருகையன் (23.04.1935-27.6.2009), சாவக்சேரியின் கல்வயல் பிரதேசத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் யாழ். இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் கற்று பட்டதாரியானார் (1956). அதனைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்ட பாடநெறியை முழுமை செய்ததுடன் தனது முதுகலைமாணி பட்டத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். 1956 இல் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களை பயிற்றுவித்து ஏழாண்டுகள் ஆசிரியராக கடமையாற்றிய பின்னர் அரச கரும மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக பதவியேற்று, பின்னர் கல்வித் திணைக்களத்தில் பதிப்பாசிரியராகவும் பிரதம பதிப்பாசிரியராகவும் பதவி வகித்தார். 1978-1983 வரையான காலப் பகுதிக்குள் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றியதை அடுத்து 1984 இல் முல்லைத்தீவு பிராந்தியக் கல்விப் பணிப்பாளராக பதவியேற்றார். அதன் பின்னர் வவுனியா பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். அதனை அடுத்த 1986 காலப் பகுதியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முது துணைப் பதிவாளராகப் பதவியேற்று 1995 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னர் 2002 வரை பல்கலைக்கழக தமிழ்த்துறையில் வருகை தரு விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். பிரசித்தி பெற்ற தமிழாசிரியரின் புதல்வராகப் பிறந்த முருகையன், தமிழ்ப் பற்றும் தமிழ் உணர்வும் மிகக் கொண்ட ஒரு கல்வியியலாளராக திகழ்ந்தார். மானுடநேயம் மிகுந்த விஞ்ஞான ரீதியான கல்விப்புலமையுடைய ஒரு கவிஞனாகவே வாழ்ந்துள்ளார். இவரது கவிதைகளின் பெருந்தொகுப்பு இது.

ஏனைய பதிவுகள்

17126 சைவ சமய வாழ்வியலும் ஆன்மிகமும்: ஒரு கைநூல்.

அம்பலவாணர் இராஜரட்ணம். கொழும்பு: சைவப்புலவர் சைவசித்தாந்த பண்டிதர் அம்பலவாணர் இராஜரட்ணம், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xxiii, 472 பக்கம், விளக்கப்படங்கள், விலை: