15597 முற்றுப்பெறாத கவிதைகள்.

நிலாந்தி சசிகுமார். மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

80 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-4041-09-7.

17.11.1984இல் மட்டக்களப்பில் பிறந்த நிலாந்தி தனது 19ஆவது வயதிலிருந்தே கவிதைத் துறையில் ஈடுபாடுகொண்டு வந்துள்ளார். இவரது முதற் கவிதை மித்திரன் வார மலரில்  ‘அந்தி நிலா’ என்ற புனைபெயரில் எழுதப்பட்டது. தனது மன உணர்வுகளை வெளிப்படுத்த இக்கவிஞர் தேர்ந்தெடுத்த ஊடகமாக கவிதை வாய்த்திருக்கிறது. ‘என் கைகள் துடிக்கின்றன/கண்கள் சொக்குகின்றன/ தாகம்/தாகம்/பேனாவில் மையை ஊற்றுங்கள்/தொண்டையில் சிக்கிய கவிகள்/ வெளியில் வந்து விழட்டும்’ என்பது இவரது முதற் கவிதை வரிகளாகின்றன. மனித உணர்ச்சிகளை, மனப் போராட்டங்களை கனகச்சிதமாகத் தனது கவிதை வரிகளில் புலப்படுத்துகின்றார். இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் ஒரு பெண் தன் இருப்பை, இருப்பின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்துள்ளன. சிறந்த படிமங்களின் வழியாக இன்றைய சாதாரண தமிழ்ப் பெண்களின் யதார்த்த நிலைமையை காணமுடிகின்றது. இந்நூல் மகுடம் பதிப்பகத்தின் 14ஆவது பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Winzino On-line casino Review

Posts Guts casino app ios | Best rated Real money All of us Online casinos Affiliate views and you will lookup away from Winzino Gambling