15599 மூதூர் எம்.எம்.ஏ. அனஸின் நன்னெறிக் குறள்.

எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்: மூதூர் உமர் நெய்னார் புலவர் கழகம், 1வது பதிப்பு, மே 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

91 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-42444-6-7.

குறள் வெண்பா, நேரிசை வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என ஐந்து வகை வெண்பாக்கள் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. இவற்றில்  குறள் வெண்பா எனப்படும் ஈரடி வெண்பாவில் உலக நன்நெறிகளைப் பகர வேண்டுமென்ற வாஞ்சையின் காரணமாக ஆசிரியர் இந்நூலை எழுதியுள்ளார். இதிலுள்ள குறள் வெண்பாக்கள், இறைவன், தாய், தந்தை, தாய்நாடு, ஒழுக்கம், கல்வி, பொறுமை, நன்னெறி, நல்லோர், உள்ளம், தலைமை, பணம், கயவர், நட்பு, காலம், தற்பெருமை, பெண்கள், ஒற்றுமை, ஆசை, நீதி, முயற்சி, நன்றி, நாணம், தர்மம், நம்பிக்கை, அமைதி, மனைவி, இறையச்சம், காதல், வீரம், துரோகம், எளிமை, நூல்கள், அழகு, குழந்தைச் செல்வம், சிந்தனை, இலட்சியம், புன்னகை, விருந்தோம்பல், கோபம், சேவை, ஆசிரியர்கள், புறம், தீச்செயல், சோம்பல், தூரநோக்கு, கண்ணியம், சுதந்திரம், சூது, உள உறுதி, இன்னல், வறுமை, வாசிப்பு, செல்வம், தேர்தல், பொதுவானவை, உரையாடல், உறவினர் ஆகிய 58 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Tragamonedas Zeus 1000

Content Los Juegos Sobre Casino Te Esperan, ¿apuestas A ganar En el caso de que nos lo olvidemos Juegas Por Divertimento? Diferentes Slots De Wms