15600 மூன்றாம் சாமத்து புன்னகை.

எம்.ரி.எம்.யூனுஸ். காத்தான்குடி: இஸ்லாமிய இலக்கியக் கழகம், 150, கடற்கரை வீதி, புதிய காத்தான்குடி -3, 1வது பதிப்பு, 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

116 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0932-26-9.

‘காத்தநகரான் என்ற புனைபெயரில் படைப்பிலக்கியங்களைத் தந்துவரும் யூனுசின் எளிமையான, வலிமையான கவிதைகள் இவை. தன்னைச் சுற்றியுள்ள சூழலின் இருண்மைகளிலிருந்தும், ஒளிமைகளிலிருந்தும், நூற்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி எடுத்து கவிதைகளை நெய்கின்றார். தன்னைப் பாதித்துச் செல்லுகின்ற நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்புகளாக நம் கண்முன்னே காட்சிகள் காட்டி விரிகின்றன அவரது கவிதைகள். இஸங்களின் கவர்ச்சிகரமான மயக்கங்கள் பற்றி எதுவித பிரக்ஞையுமின்றி, தான் போகின்ற போக்கில் கவிதைகளோடு உரையாடுகின்ற யூனுஸின் மனோபக்குவம் நம் முன்னே ஒரு பெருங்கடலென விரிகையில் நுரைகளடங்கா அதன் பொறுமலில் அடங்காது அவர் நடந்து செல்கின்றார்’. (பின்னட்டையில், கிண்ணியா சபறுள்ளாஹ்).

ஏனைய பதிவுகள்

Tragaperras Bonus

Content Licitud De los Juegos De Tragamonedas Regalado Online ¿cómo Puedo Obtener Partido De los Bonos Carente Tanque Así­ como De estas Tiradas Gratuitas? Superiores